பிரதான செய்திகள்

திருகோணமலையில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் 18 வயது மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் ஜெயநகர் பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

முசலி வட்டார வர்த்தகமானி அறிவித்தல்! முன்னால் பிரதேச செயலாளரின் இனவாதத்தின் உச்சகட்டமே! பிரதேச மக்கள் ஆவேசம்

wpengine

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு .

Maash

சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட்டின் உருவ பொம்மையை எரித்து கல்லடியில் ஆர்ப்பாட்டம்!

Editor