பிரதான செய்திகள்

மன்னாரில் கோடி கணக்கில் சிக்கிய கஞ்சா!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து 1 ஆம் திகதி மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய மன்னார் – பேசாலை, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உப ஜனாதிபதி முறை தேவை;மனோ

wpengine

மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! மனிதப் புதைகுழி

wpengine

முசலி பிரதேச சபையின் Finger Print Machine எப்படி மாயமானது?

wpengine