பிரதான செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு தேசிய தொழிற் சான்றிதழ் குடியியல் பொறியியல் தகைமை பெற்ற தொழிட்ப உத்தியோகத்தர்களை தற்காலிக அடிப்படையில் இணைத்துக் கொள்ளவுள்ளது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் அமைச்சானது திருகோணமலை மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அவ்வகையில் குறித்த இவ் அமைச்சு இவ்வாண்டுக்காக குறித்த தகைமை பெற்றவர்களை குறிப்பிட்ட பதவிக்கு இணைத்துக் கொள்ளவுள்ளது.

குறித்த தகைமை மற்றும் கட்டட நிர்மாணத்துறையில் அனுபவம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும். கடித உறையின் இடப்பக்க மேல் மூலையில் பதவியின் பெயரை குறிப்பிட்டு உரிய சான்றிதழ்களின் பிரதிகளை சுயமாக தயாரிக்கப்பட்ட பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் 31.05.2016 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில் மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Related posts

மன்னார் கனிமமண் அகழ்விற்கு நீர் பரிசோதனைக்கு கொழும்பில் இருந்து வருகை, – ஊர் மக்கள் எதிர்ப்பால் திருப்பியனுப்பப்பட்டனர்.

Maash

கூகுள் கோட் இன் – 2019 இந்துக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

wpengine

இராஜினாமாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.

wpengine