பிரதான செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (02) பாராளுமன்றம் கூடாது!

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை (01) நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாளை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்கால பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் அடங்கிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு  இன்று (30) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்றக் கூட்டங்கள் இடம்பெறாது எனவும், எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

‘இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் காழ்ப்புணர்ச்சி நோக்கம் கொண்டவை’ – ரிஷாட் பதியுதீன்!

wpengine

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

கொரியாவில் e-08 விசா மூலம், 8 மாத பருவகால வேலை வாய்ப்பு..!!!

Maash