Breaking
Wed. Dec 4th, 2024

களனிவெளி ரயில் மார்க்களத்தில் ரயில் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (28) அதிகாலை 4.00 மணியளவில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை தடமேற்றும் நடவடிக்கை நிறைவடைந்த போதிலும், மார்க்கத்தின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை 07 ரயில் போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் பயணிகளின் வசதிக்காக நாரஹேன்பிட்டி ரயில் நிலையம் வரை ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த ரயிலின் இரண்டு பெட்டிகள் நேற்று (27) பிற்பகல் பொரளை கோட்டா வீதி ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டன.

இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

A B

By A B

Related Post