Breaking
Sun. Nov 24th, 2024
SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்)

கொலன்னாவை  தொட்டு  வெல்லம்பிட்டி, அம்பேத்தள  வரையிலான 50 வீதமான நிலப்பிரதேசம் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதியாகி தமது இருப்பிடங்கள், வீட்டுப்பாவணைப் பொருட்களை இழந்துள்ளனா்.

90 வீதமான மக்களை  வெள்ளப்பிதேச இடங்களில் இருந்து படகுகள் மூலம் பொலிசாா், கடற்படையினா் உதவிகளுடன் மீட்டெடுத்துள்ளனா்.  எதிா்வரும் திங்கட் கிழமை வரை இம் மக்களை மீள தாழ்ந்த பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிப்பதில்லை  நீா் வழிந்தோடிய பின்பே இவா்கள் மீள வீடுகளைப் சென்று பாா்க்க அனுமதிகக்ப்படுவா் என கொலான்னாவை ஜ.தே கட்சி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம் மரிக்காா் தெரிவித்தாா்.

அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெருவித்தாா்.

அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில் –

பிரமதா் ரணில் விக்கிரமசிங்க அவா்கள் நேரடியாக நேற்று நிலைமைகளை அவதானித்தாா். அத்துடன் உப அமைச்சரவை குழு கூடி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மாற்று அகதிமுகாம்கள் கலந்தாலோசித்து உடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா்.  பாதிக்க்பபட்ட  மக்களுக்காக மூவேளையும்  உணவு வழங்குவதற்காக 220 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது இம் மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம், உடை, தற்காலிக கூடாரம், தலையணி, பெட்சீட், மெட்ரஸ்,  பால்மா பிளாஸ்டிக் பாத்திரங்கள், குடிநீர் தற்காலிக மலசல கூடம், சிறுபிள்ளைகளுக்கான உடை, பால்மா அவசரமாக தேவைப்படுகின்றது.

முல்லேரியா 10 படகுகளும், கொலன்னாவை 54 படகுகளும் தற்பொழுது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தின் முறையற்ற கொங்கிறீட் வீதி, இப்பிரதேசங்களில் கான் மழை நீா் வழிந்தோடக் கூடிய வடிகால்  திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. தற்பொழுது தேங்கி நிற்கும் நீர் வழிந்தோடக் கூடிய முறைமை இல்லாமல் உள்ளது.  நீரை உருஞ்சி கடலில் கொண்டு போய் விடும் திட்டமே அவசாரமாக தேவைப்படுகின்றது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *