Breaking
Sat. Nov 23rd, 2024

உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன்களை மீளவும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோாிக்கை விடுத்துள்ளாா்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றிய போதே இந்த கோாிக்கையை முன்வைத்துள்ளாா்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன்களை வழங்கிய போதிலும் 2021/2022 ஆம் வருட தொகுதி மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்குத் தேவையான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

2017 ஆம் ஆண்டு,பட்டதாரி கற்கைகளை வழங்கும் ஆறு கல்வி நிறுவனங்களுக்கு,26 கற்கைகளுக்காக 8 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் வழங்கப்பட்டதாகவும், ஆனால் 2021/202 தொகுதி மாணவர்களுக்கு இந்தக்கடன் இன்னும் வழங்கப்படவில்லை என்றும்,இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கூட கிடைத்துள்ளதாகவும்எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் கூட கிடைக்கப்பெற்றிருக்கும் இவ்வேளையில் இதுநடைமுறைப்படுத்தப்படாமை பிரச்சினையாகும் என்றும்,விதிமுறைகளை தற்போது ஏற்படுத்ததாது,7ஆம்தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து கடனை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்விடுத்துள்ளாா்.

A B

By A B

Related Post