பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போது, குறித்த இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்காக ஜப்பானின் ஜய்க்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடனும் இடைநிறுத்தப்பட்டதால் கட்டுமானப் பணிகளை நிறுத்த நேரிட்டுள்ளது.

Related posts

விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பணத்தொகை வழங்கப்படவில்லை

wpengine

பேஸ்புக்,தொலைபேசி பாவனையாளர்களின் கவனத்திற்கு

wpengine

Editor