பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சில பகுதிகளில் உரிய முறையில் வாக்காளர் இடாப்பு திருத்தம் உரிய முறையில் இடம்பெறவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் மீண்டும் தேர்தலுக்கான நிதியை திறைசேரியிடமிருந்து கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நிதி மோசடி குற்றச்சாட்டு ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine

உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மாவட்ட மட்ட கலந்துரையாடல்! நாளை

wpengine

சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்.

wpengine