Breaking
Wed. Dec 4th, 2024

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் இன்று அதிகாலை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரிவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 20 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முழுவதும் பல்வேறு இடங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் முறியடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

A B

By A B

Related Post