பிரதான செய்திகள்

அநுராதபுரம் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளர்கள்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள MRI ஸ்கானர் இயந்திரம்செயலிழந்துள்ளதால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேறு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகம் “ கடந்த இரண்டு மாதங்களாகப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது நாங்கள் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். விரைவில் இயந்திரத்தை மீண்டும் செயற்பாட்டுக்குக் கொண்டு வருவோம். தற்போது ஸ்கேன் பரிசோதனைக்கு வருபவர்கள் குருநாகல் மற்றும் பொலன்னறுவை போன்ற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் “ வறிய மக்கள் ஸ்கான் பரிசோதனைக்காக கொழும்பு, பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதால்  பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.  அது மட்டுமல்லாது இந்நடவடிக்கையானது   அரசாங்கத்திற்கு மேலும் ஒரு செலவாகும் ” என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கவலை தெரிவித்துள்ளார்.

Related posts

விக்கெட் இழப்பின்றி பெங்களூரு வெற்றி!

wpengine

இலங்கை : 236 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளும் இழப்பு

wpengine

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மரபணு பரிசோதனை

wpengine