Breaking
Fri. Nov 22nd, 2024

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் இம்மாதத்தின் முதல் 8 நாட்களில் மாத்திரம் 22,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ” கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகையானது சராசரியாக 2,675 ஆக இருந்துள்ளது. எனினும் இம் மாதத்தின் தினசரி வருகை சராசரியாக 2,775 ஆக அதிகரித்துள்ளது .

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை மொத்த வருகையின் எண்ணிக்கை 546,686 ஆக உள்ளது. தற்போதைய வேகத்தை பேணினால், இம் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே இவ் வருட இறுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

A B

By A B

Related Post