Breaking
Sun. Nov 24th, 2024
SAMSUNG CSC
(அஷ்ரப் ஏ சமத்)
கடந்த 2 நாற்களாக பெய்த மழையினால் கொலன்நாவ – தொட்டு அன்கொட  வெல்லம்பிட்டிய வரையிலான 80ஆயிரம் பேருக்கு அதிகமான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. களனி கங்கையின் நீர் பெருக்கின் காரணமாகவே இவ்வாறு படுமோசமாக இப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் 18 ஆயிரம் குடும்பங்கள் அவா்களது உரைவிடம், வீட்டுப் பாவனைப் பொருட்கள் அத்தனையும் வெள்ள நீா் ஊற்றெடுத்தனால் இக் குடும்பங்கள் நடு வீதிக்கு வந்துள்ளனா். சிலா் தமது வீடுகளில் இருந்து மேட்டு பக்கமாக வருவதற்கும் வசதியில்லாமல் வீதிகள் வீட்டுக்குள் 10 அடிக்கும் மேல் தண்ணீர் நிரம்பி வழிந்துள்ளது.

நேற்று இப்பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா்  உடன் சமைத்த    15 ஆயிரம் உணவுப்  பாா்சலை வழங்கு வதற்காக  (18) ஆம் திகதி முழு நாளும்  அங்கு சென்றிருந்தேன் இப்பிரதேச மக்களது பசிக்கு  உணவுப் பாா்சலையாவது வழங்குவதற்குகூட வெள்ள நீா் கொண்ட  பாதைகள் 8 அடிக்கு மேல்  நீர் நிரம்பி வழிந்திருந்தனாால் தமது உணவைக் கூட  பெற முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் பசியாலும்  கஸ்டப்படுகின்றனா்.

SAMSUNG CSC
அதிலும் முஸ்லீம் மக்கள் தமது வயிற்றுப் பசிக்காக  ஒர் உணவுப்பாா்சலையாவது  பெறாமலும் அகதி முகாம்களில் இருந்து பழக்கப்படாமலும் இருக்கின்றனா். தமது கஷ்டங்கள்  வீடுகளில் இருந்த இலச்சக்கணக்கான பொருட்கள் தமது பிள்ளைகளது பாடசாலைப் புத்தகங்கள் உடுப்புக்கள் இல்லாமையினால்  தமது இழப்புக்களையும்  இழந்தாலும் தமது கஸ்டங்களையும் வெளியே செல்லாது உணவுப்  பாா்சலுக்கு முந்தி அடித்து ஓடாமால் நிற்கின்றனா்.

அவா்கள் தமது இயற்கை அநா்த்த அழிவுகளை தமக்குள்ளே புதைத்து அந்தந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி கண்னீா் வடிப்பதையும்  நேரடியாகக் காணக்கூடியதாக  இருந்தது..  அவா்களுக்கென்று சில முஸ்லீம் வா்த்தகா்கள், முஸ்லீம் மத ஸ்தாபணங்கள் நீர், உணவுகளை கொண்டு வந்தாலும் அதனை எடுத்துச் செல்வதற்கு  அரச  படகுகள் இன்மையால் கஸ்டப்படுவதையும் அவதாணிக்க கூடியதாக இருந்தது.

SAMSUNG CSC
இப் பிரதேசம் கடந்த 84 ஆம் ஆண்டு வந்த வெள்ளப் பெருக்கத்திற்கு  பிறகு இம்முறை இவ் வெள்ளப் பெருக்கினால்  பாதிகக்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனா். முன்னைய ஆட்சியில் இருந்த அரசு கமநெகும் திட்டத்தின் கீழ் ஒரு திட்டமிடாத கொங்கீறீட் வீதித் திட்டங்கள் பாதைகள்  நிர்மாணிப்பு, தெஹிவளை ரத்மலானையில் கடந்த 5 வருடத்தில் உலக வங்கி நிதி உதவியினால் நிர்மாணிகக்ப்பட்ட மழை நீர்  வடிந்தோடக்கூடிய கான், ரெயினேஜ் திட்டம் கொலாநவையில் அறிமுகப்படுத்தப்படாமை, அருகில் களனி நீா் கங்கை அமையப்பெற்றமை திட்டமிடாத குடியிருப்புக்கள்,  கடுகதி பாதைகள் விஸ்தரிப்பு போன்ற பிரச்சினைகளளே இவ்வாறு இப்பிரதேசங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது இம் மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம்,  தற்காலிக வீடுகள், தற்காலிக மலசல கூடங்கள், உணவு, உடுப்பு சுகாதார பரிசோதனைகள் அவசர அவசரமாக  இம்மக்களுக்கு தேவைப்டுகின்றன.SAMSUNG CSC

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *