Breaking
Mon. Nov 25th, 2024

இந்த ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இப்பாடசாலைகளுக்கு கடந்த மே 26-ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நடவடிக்கைகளுக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகும் வரையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, அடுத்த வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்களை முதலாம் தரத்திற்குச் சேர்ப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இந்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தைகளுக்கு 3 வீதம் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட வீதம் ஒதுக்கப்படாமையால் பல பிரச்சினைகள் எழுந்தன. எனினும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆரம்பிக்கப்படும்.

இதற்கு மேலும் ஒரு மாத காலம் ஆகும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

A B

By A B

Related Post