Breaking
Mon. Nov 25th, 2024

கொழும்பில் வெல்லம்பிட்டி, வென்னவத்தை, கொத்தட்டுவ, பிரெண்டியாவத்தை, ஐடிஎச், கொலன்னாவ ஆகிய பிரதேசங்கலில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் இந்த மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசர உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் துரித கதியில் வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்து, நிவாரணப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று, மக்களுக்கு உதவி வருகின்றனர். நேற்று காலை (18/05/2016) அமைச்சரின் வேண்டுகொளுக்கிணங்க 24 படகுகள் மக்களை மீட்டெடுப்பதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன் அமைச்சரின் தனிப்பட்ட நிதியுதவியில் நான்கு படகுகள், வெள்ளத்தினால் வீடுகளில் சிக்குண்டு கிடக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஹுசைன் பைலாவின் வேண்டுகோளை ஏற்று, இலங்கை வாழ் போறா சமூகத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் பணியில் மிகுந்த ஈடுபாடு காட்டிவருகின்றனர். வெல்லம்பிட்டியில் அமைச்சரின் நெருங்கிய விசுவாசிகள் இந்தப் பணிகளை அந்தப் பிரதேசத்தில் ஒருங்கமைத்து வருகின்றனர்.0113bd92-ac0c-4b04-9aaa-894da063db74

பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள அப்பாவி மக்களுக்குத்  தொடர்ந்து உலர்உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர் நாட்டில் இல்லாமை காரணமாக, இந்த ஒட்டுமொத்தப் பணிகளையும் ஒழுங்கமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் பொறுப்பை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஏற்றுள்ளார் அத்துடன் கட்சியின் செயலளர் நாயகம் சுபைர்டீன் ஹாஜியார், மேல் மாகான சபை உறுப்பினர் பாயிஸ், முன்னாள் பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா, கிண்ணிய நகர சபை முன்னாள் தலைவர் ஹில்மி மஹ்ரூப், சட்டத்தரணி  ருஸ்தி ஹபீப் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.  49dd0f3f-0963-459c-82ae-6059c9acd36c

இதேவேளை கொழும்பின் வரலாற்றில் என்றுமே காணாத இந்த வெள்ளத்தினால் பல வீடுகள் மூழ்கிக் கிடக்கின்றன. நேற்றுக் காலை மாடி வீடுகளில் தொடர்ந்தும் இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு அங்கு தங்கியிருந்த மக்களை மீட்பு பணியாளர்கள் இன்று கரை சேர்த்தனர்,

சிறிய படகுகளும், டயர் டியூபில் வரிந்து கட்டப்பட்ட பலகைகளைக் கொண்ட மிதவைகளும், இந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அநேகமான மக்கள் பாதையோரங்களில் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் ஏக்கத்துடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இராணுவத்தினரும்,கடற்படையினரும், பொலிஸாரும் இந்த மக்களுக்கு முடிந்த உதவிகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது. சந்திக்குச்  சாந்தி பரோபகாரிகள் சிலர் உணவுப் பொதிகளை கொண்டுவந்து மக்களுக்கு  விநியோகித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் உடுத்த உடையுடன் தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு, ஓடி வந்ததினால் மாற்றுடைகள் தேவை என்று கூறினர். சமூக நல நிறுவனங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, போதியளவு உடுதுணிகளை வழங்க வேண்டுமென கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.f64bb19e-71c4-4215-81b8-d214ac8bd24f

இதேவேளை நாட்டின் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க, புத்தளம், மன்னார் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கவனிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது கட்சித் தொண்டர்களைப் பணித்துள்ளார்.

இந்த முயற்சியில் இணைந்துள்ள மீட்புப் பணியாளர்கள், கட்சித்தொண்டர்கள், சமூக நல நிறுவனங்கள், சகோதர கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் அமைச்சர் தனது மனமார்ந்த நன்றிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் இய்லப்பன வாழ்க்கைக்கு திரும்பும் வரை அவர்களுக்கு உதவி புரியுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *