Breaking
Sat. Nov 23rd, 2024

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது.

நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 3000kg அரிசியில் 1600kg அரிசியினை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு மிகுதியான 1400kg அரிசியினை, விலை குறைந்தமையால் வழங்கப்படாமல், அறையிலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி காலாவதியான நிலையில் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக அவை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

நானுஓயா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் படி  பாவனைக்கு உதவாத அரிசி குழி தோண்டி புதைக்கப்பட்ட இடத்தினை கண்டறிந்து மீண்டும் தோன்டி எடுத்து அரிசியின் தரம் பற்றிய பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றன .

குறித்த அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் , இதன் மாதிரிகளையும் பரிசோனைக்காக எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

A B

By A B

Related Post