Breaking
Sun. Nov 24th, 2024

அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர்கள் 10 பேர் கொண்ட குழுவினால் அடுத்த சில நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பல வாரங்களுக்கு முன்னர் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை அரசியலமைப்பு பேரவை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியலமைப்பின் 41B பிரிவின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை அரசியலமைப்பு சபை கோரியது.

பேரவை பின்னர் உறுப்பினர்களை முடிவு செய்ய பல சந்தர்ப்பங்களை வைத்தது, ஆனால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு பேரவை மீண்டும் அமைக்கப்பட்டது.

நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை, மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்பு சபைக்கு உள்ளது.

10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையில் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இருக்கும் அதே வேளையில் சபாநாயகர் சபையின் தலைவராக இருக்கிறார்.

சபை ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று சிவில் பிரதிநிதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A B

By A B

Related Post