பிரதான செய்திகள்

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை 100 ரூபாயினால் குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த எரிவாயுவின் விலை சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை  1005 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த எரிவாயு கொள்கலன் தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இன்று நள்ளிரவு முதல் இந்த நிலையில், மாற்றம் ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

wpengine

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தின் தொகுப்பில் இருந்து .

Maash

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மாட்டிக்கொண்ட மைத்திரி

wpengine