பிரதான செய்திகள்

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை!-சுகாதார சேவைகள் பணிப்பாளர்-

இந்த வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

எரிபொருள் 10 ரூபாய் குறைப்பின் மூலம் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு சாத்தியமில்லை .

Maash

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

wpengine