Breaking
Sun. Nov 24th, 2024

“வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் – தாய்நாட்டின் போராட்டம்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் மே தினக் கூட்டத்தில் எதிர்க்க்ட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை.

இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்நாட்டின் அரசியல் சக்திகள் வீதியில் இறங்கியுள்ளன, இன்று ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் சாதனையை நிலைநாட்டுயுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த சாதனை தான் சர்வதேச மே தின நிகழ்வை ஒரு நிகழ்வாக நடத்தாது இரு நிகழ்வுகளை நடத்தியதாகும். ஒன்றுதான் கொழும்பு ஏ ஈ குணசிங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

மற்றயது பதுளை நகரில் வடிவேல் சுரேஷ், சமிந்த விஜேசிறி காவிந்த ஜயவர்தன, வேலுகுமார், உமா உட்பட எமது அணியினர் மலையக உழைக்கும் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலையக உழைக்கும் சமூகத்தின் மாபெரும் மே தின பேரணியை நடாத்துகிறோம்.

அரசியல் என்பது பட்டம் பதவிகளை தேடுவது அல்ல. முறைமை மாற்றத்தை நோக்கியே அரசியல் செய்கிறோம். அரச பதவிக்கு பேராசை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அல்ல நாங்கள். இன்றைய அரசியல் சமூகத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இரட்டை வேடம் போட்டு செயற்படாதீர்கள் என்று தெளிவாகச் சொல்கிறேன். உங்கள் கால்களை எல்லா பக்கங்களிலும் வைக்க வேண்டாம். இருக்க முடியாவிட்டால் போகுமாறு கூறுகிறேன். இரட்டை வேடம் போடுபவர்கள் எங்களிடம் இல்லை. அவ்வாறு இருந்தாலே இவ்வாறு சொல்கிறேன். குறிப்பாக இன்று இலஞ்சம், ஊழல், மோசடிகள் ஆட்சி செய்கின்றன. ஜப்பான் அரசாங்கத்திடமும் கமிஷன் கோரப்பட்டது. கண்டுகொள்ளாத பசளைகளுக்கும் நிதி வழங்கியது அரசாங்கம். இல்லாத எயர்பஸ்களுக்கு இழப்பீடு செலுத்துகின்றனர். 4 ஆண்டுகளில் IMF இந்த நாட்டிற்கு வழங்கும் 2.9 பில்லியனை விட 6.4 பில்லியன் டொலர்களை எக்ஸ்பிரஸ் பேர்லின் அழிவின் மதிப்பீட்டிலிருந்தும் கொள்ளையடித்தனர்.

அரசாங்கத்துடன் இணைவோமா என்று கேட்கிறார்கள். நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஒருவருடனேயே அரசாங்கத்திற்குச் செல்வோம். இன்று ஐ எம் எப் பற்றி பலர் பேசுகிறார்கள். அந்த ஒப்பந்தம் குறித்து பேசுகின்றனர். ரணசிங்க பிரேமதாசவும் இரண்டு தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றதை நினைவில் கொள்ளுங்கள். யாரோ கூறுகிறார்கள் என்பதற்காக சாதாரன மக்களின் சலுகைகளை நிறுத்தவில்லை. ஜன சவிய திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்., பத்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. வறுமை ஒழிந்தது. 43 இலட்சம் மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டன. உணவு கொடுத்தார். வறுமையை தகுதியாக் கொண்டு 30,000 பயிலுநர் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஐ எம்.எப் க்கு போகுமாறு நாங்கள்தான் முதலில் சொன்னோம். 2048 வரை இதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ஹர்ஷ கபீர் எரான் உட்பட நாட்டைக் கட்டியெழுப்பும் மிகவும் புத்திஜீவித்துவ குழுவினர் மற்றும் உகந்த பொருளாதாரக் குழுவினர், தொழில் வல்லுநர்கள் மற்றும் படித்த இளைஞர்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் ஆட்சியின் முதல் தவணையில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். எங்களிடம் மட்டுமே இத்தகைய குழுவிவுள்ளனர்.

கைகளையும், கால்களையும் துண்டிக்காமல் நோயாளி ஒருவரின் காப்பாற்ற முடியும். ஆனால் இரண்டு கைகளையும், கால்களையும், காது, மூக்கு, வாய் என துண்டித்து நோயாளியை காப்பாற்றும் நடவடிக்கையே மேற்கொள்கிறது. இவ்வாறு நோயரை காப்பாற்றும் பொருளாதார நிபுணரே ரணில்.

நாங்கள் ஒருபோதும் பங்குச்சந்தையை மூடுவதற்கு நினைக்க மாட்டோம் வங்கிகளை மூடுவதற்கு நினைக்க மாட்டோம். பொருளாதாரத்தை மூடமாட்டோம் பொருளாதாரத்தை சுருக்கி தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சாதாரண மனிதர்களுக்கு வரியை விதிப்பது எமது முறையல்ல.

நாங்கள் கடினமான முடிவுகளை எடுப்போம். கனவு உலகில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. உண்மையான நிதர்சனமாக நவீன பொருளாதாரத்தின் ஊடாக புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கைத்தொழில் புரட்சி மூலம் கணினி புரட்சி மூலம் நலனோம்பு மிக்க அரசொன்றை பாதுகாத்து கொண்டு நவீன படுத்துவதன் மூலம் செயற்திறமையாக்கி நாட்டை கட்டியெழுப்ப பாரிய புரட்சிகர செயற்பாட்டை ஏற்படுத்த தயார் என்று நான் கூறுகிறேன்.

எமது வேலைத் திட்டங்கள் இலங்கையை உலகில் முதல் நிலைக்கு ஸ்தானப்படுத்துவதாகவும். சிறிலங்கா 1st என்பதே எமது இலக்காகும். உலகில் முதல் நிலைக்கு கொண்டு வருவதாக கூறி நாட்டு மக்களுக்கு நகைச்சுவை தெரிவித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள் முயற்சிப்பவர்கள் இவ்வாறு தெரிவிக்கும் போது சிரிப்பு வருகிறது. என்றாலும் ருவண்டாவில் ஏற்பட்ட மோதலில் 8 இலட்சம் பேர் இல்லாமல் போனதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்றாலும் இன்று அது ஆப்பிரிக்காவின் சிங்கபூர், வியட்நாம், யுத்தத்தில் அழிவுற்றாலும், இன்று அந்நாடுகள் இருக்கும் இடத்தை பாருங்கள். டொல்கெட் ஆட்சியில் அழிவுற்ற கம்பொடியா இன்று பலமிக்க பொருளாதாரத்தை நோக்கி செல்கிறது. அப்படியென்றால் எமது நோக்கு சிறிலங்கா 1st வேலைத்திட்டமாகும் இதன் கீழ் பத்தாண்டு வேலை திட்டம் இருக்கிறது.

தொழிலாளர்கள் உட்பட மக்கள் சமூகம் அனைவரும் உறுதிமிக்க வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கு முடியுமான அனைவரையும் மேம்படுத்தும் நவீன பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். அனைவருக்கும் அபிவிருத்தி, நலனோம்பு, சௌபாக்கியத்தை ஏற்படுத்துவோம். மனித சிவில் மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாத்து ஜனநாயகம் மனித சுதந்திரத்தை பாதுகாக்கின்ற மனிதாபிமான ஆட்சியைப் பாதுகாப்போம்.

இலஞ்ச, ஊழல் மோசடி திருட்டை இல்லாமல் ஆக்குவோம். இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். நவீன தொழில்நுட்ப தகவல் தொழிப்பத்தின் ஊடாக ஸ்மார்ட் தேசம் ஒன்றை உருவாக்குவோம். ஸ்மார்ட் பிரஜைகளையும் ஸ்மார்ட் நகரங்களையும் உருவாக்குவோம். நவீன தொழில்நுட்ப புரட்சியின் தொழில்வாண்மையாளர்களின் பிரதிபலன்களை பாதுகாப்போம். பசுமை புரட்சியின் பொருளாதார ஸ்திரத்தன்மை அபிவிருத்தியை செயற்படுத்த கூடிய நாட்டை ஏற்படுத்துவோம்.

ஏற்றுமதி பயிர்கள், விவசாய பொருளாதாரம் உட்பட பயிர்ச் செய்கைகளின் நடவடிக்கைகளை நவீனப்படுத்துவதன் மூலம் பலப்படுத்துவோம். கல்வி, சுகாதாரத்தை நவீனபமயப்படுத்துவதன் மூலம் செயல் திறமை மிக்க நலன்புரி அரசொன்றை உருவாக்குவோம். இன,மத குலங்களை இல்லாமல் செய்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு குடு (போதை) கலாச்சாரத்தை அழித்தொழித்து தேச பக்தியுள்ள பெருமைமிக்க தேசமொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம்.

கடந்த வருடம் கண்டியில் இருந்து நடை பேரணியொன்றை ஆரம்பித்து மே தினத்தில் இந்நாட்டில் உண்மையான ஜனநாயக புரட்சிக்கு உயிர் கொடுத்தோம்.இம்முறை மே தினத்தை ராஜபக்ஷ நிழல் அரசாங்கத்தின் திருட்டு மோசடியாளர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் தேசிய புரட்சியை முன்னெடுப்போம். வேலை செய்யும் மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது எமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீண்டும் கலந்துரையாடி சாதாரண மக்களின் பால், சாதாரண மனிதனின் பால் 220 இலட்சம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற பிரேமதாச யுகத்தை ஏற்படுத்தி மக்கள் மயமான, மக்கள் விரும்பும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு முயலுவோம்.மே தினத்துக்கு பிறகு உங்கள் கிராமங்களுக்கு மீண்டும் வருவோம். இந்நாட்டில் இருப்பது தேர்தலுக்கு பயந்த கோழைத்தனமான அரசாங்கமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 9 மாகாணங்கள், 25 மாவட்டங்களையும், கிராமங்களின் ஊடாகவும் நாட்டை வெற்றிக்கொள்ளும் பாரிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனபவுர திட்டத்தை ஏற்படுத்துவோம்.

தேர்தல் நிலைய வாக்களிப்பு மட்டத்தில் 100 இருந்து 150 வரையில் சபைகளை ஏற்படுத்தி இரட்டிப்பை மும்மடங்காக மாற்றி ஜூன் 16 இருந்து ஒவ்வொரு தொகுதியிலும் ஜனபவுர திட்டத்தின் ஊடாக அந்த சக்தியை ஏற்படுத்தி சமூக, ஜனநாயக, பொருளாதார சந்தையில் வறுமையை இல்லாமல் ஆக்கி அனைவருக்கும் பலத்தை வழங்குகின்ற எமது பெருமை மிக்க இலங்கை தாயைக் கட்டியெழுப்ப கைக்கோர்த்து கொள்ள வருவறுமாறு அழைப்பு விடுக்கிறேன என்றார்.

A B

By A B

Related Post