பிரதான செய்திகள்

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிய 6பேர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஏ9 வீதி ஊடாக மாடுகளை ஏற்றி பயணித்த கப் வாகனத்தை பளை பொலிசார் முகமாலை பகுதியில் இடை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றம் உதவியாளர் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றி சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 மாடுகளில் ஒரு மாடு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்…

Maash

அமைச்சர் ஹக்கீமீன் கவனத்திற்கு! மன்னார் நகரில் பாதிப்படைந்த குடிநீர் திட்டம்.

wpengine

பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை

wpengine