Breaking
Sat. Nov 23rd, 2024

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 

குறித்த பயங்கரவாத குழுக்கள் இராணுவ வீரர்களை குறி வைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

எனவே ,இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க இராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். 

இந்த இராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதில் 33 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த நாட்டின் இராணுவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும், 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

A B

By A B

Related Post