Breaking
Sun. Nov 24th, 2024

அரச சேவையில் இருந்து தற்காலிக விடுப்பு நிமித்தம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் சம்பளம் வழங்கப்படுமென துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தாலும், இன்று வரை குறித்த சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், எனவே அரசாங்கம் நேரடியாக முடிவெடுத்து இந்த வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாத காரணத்தை தான் வினவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது தேர்தலை நடத்துவதா அல்லது இல்லையா என்று யோசித்துக் கொண்டு இருப்பதால்,இந்த வேட்பாளர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முறையாகப் பெறுவதில்லை என்பது பாரதூரமான விடயமாகும் எனவும், அவர்களின் தவறினால் இந்த சம்பளம் இழக்கப்படவில்லை எனவும், அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ள பயந்து முதுகெலும்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

இது அரசியல் ரீதியிலான பிரச்சினையல்ல எனவும்,தேர்தலுக்கு பணம் ஒதுக்குவதை அரசாங்கம் தவிர்த்துள்ளதால் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்தாவிட்டால் அரச ஊழியர்களை மேலும் நிர்க்கதிக்குள்ளாக்காமல் இந்த வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரியவாறு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பான அமைச்சரிடமும் சபாநாயகரிடமும் கோரிக்கை விடுத்தார்.

A B

By A B

Related Post