ரஷ்யாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் தெரிவித்துள்ளதாவது,
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி உதவுவதாக நேட்டோ உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்திருந்தன. அந்த வாக்குறுதில் கூறப்பட்டிருந்த 98 சதவீத தளவாடங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.
அந்த நாட்டுக்கு இதுவரை 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன. இது மட்டுமின்றி, 30,000இற்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரா்களுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் பயிற்சி அளித்துள்ளன.
இந்த உதவிகள் மூலம் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நாட்டுப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்றாா்.