பிரதான செய்திகள்

இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்த மேலுமொரு தொகுதி இந்திய முட்டைகள்!

இந்தியாவில் இருந்து ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இன்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதவேலை தேவையான அனுமதியின்றி சுமார் இரண்டு மில்லியன் முட்டைகள் இன்னும் துறைமுகத்தில் உள்ளன.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டால், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடிய வகையில், அவற்றை வெளிச் சந்தைக்கு வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது.

Related posts

நானாட்டானில் கால்நடை வைத்திய சேவை

wpengine

தாஜுதீன் படுகொலை : என்னை தாக்க முற்பட்டவர்களை விசாரணை நடத்துக

wpengine

இனி ஐக்கிய தேசியக் கட்சியுடன் -அமைச்சர் சரத் பொன்சேகா

wpengine