Breaking
Sat. Nov 23rd, 2024

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதனால் ஒட்டுமொத்த நாடும் வன்முறை களமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு தலைநகர் கார்டூமில் உள்ள தேசிய உயிரியல் ஆய்வகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத், ‘கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வகத்தை சண்டையிடும் ஒரு தரப்பு ஆக்கிரமித்ததில் மிகப்பெரிய உயிரியல் ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

A B

By A B

Related Post