இலங்கை மின்சார சபையின் மேலதிக இணைப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிரான நிதி குற்றச்சாட்டு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் பதவியில் 10 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றும் குறித்த அதிகாரி, மின்சார சபையிலிருந்து முழு நேரமாக விடுவிக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக மின்சார சபையிடமிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சேவைகாக மின்சார சபையிடமிருந்து சம்பள உயர்வும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில வாரங்களில் ஓய்வு பெறவிருக்கும் குறித்த அதிகாரி, ஓய்வு பெறும் திகதி வரை தனிப்பட்ட விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், தற்போது மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.