Breaking
Mon. Nov 25th, 2024

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) அதனை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களில் முதலாவது குண்டு வெடிப்பு இடம் பெற்ற காலை 8:45 மணி முதல் இரண்டு நிமிடங்களை மௌன அஞ்சலிக்காக செலவிடுமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நாளை கொழும்பு – நீர் கொழும்பு வீதியில் அனைத்து மக்களினதும் பங்கேற்புடன் அமைதியானஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 8:30 மணி முதல் 09 மணி வரையிலான அரை மணி நேர காலத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம் வரை வீதியின் இரு மருங்கிலும் மக்கள் அணி திரண்டு அமைதியான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

A B

By A B

Related Post