Breaking
Tue. Nov 26th, 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மா இறக்குமதியாளர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்க அந்த சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. .

நேற்றைய கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் படி, பால் மாவின் விலை எவ்வாறு குறைக்கப்படும் என்பது தொடர்பில் எதிர்வரும் இரண்டு தினங்களில் அறிவிக்கப்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, மே மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் குறையும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

A B

By A B

Related Post