Breaking
Tue. Nov 26th, 2024

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் காலி முகத்திடலில் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பத்திரத்தின்படி, காலி முகத்திடலின் இயற்கை அழகுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

எனினும் காலி முகத்திடல் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையானது காலி முகத்திடலின் அபிவிருத்திக்கு சுமார் 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கடந்த போராட்ட காலத்தில் காலி முகத்திடல் பகுதியில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

A B

By A B

Related Post