Breaking
Tue. Nov 26th, 2024

மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கல் தொடர்பில் வழங்கப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் சகல வசதிகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களின் பொதுவாழ்க்கையை பேணுவதற்கு உரிய நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் இன்றியமையாதவை என்பதால் அந்த சேவைகளில் தடையோ அல்லது இடையூறுகளோ ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

A B

By A B

Related Post