பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உணவகங்களுக்கு செல்வது தடை!

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் , பசுமையான இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல புதிய தடையை தலிபான் விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, பெண்கள் ஹிஜாப் சரியாக அணியாததால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அதிகாரிகள் கூறுகின்றனர். 

ஆண்களும் ,பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளைக் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா மாநகரத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கான (Digital) கடிகாரம்.

Maash

QR முறை மாவட்டத்தில் ஒரு பெற்றோல் நிலையம்!

wpengine

தலைமன்னார் உருமலை பகுதியில் போதைப்பொருள்

wpengine