பிரதான செய்திகள்

3வருடங்களின் பின் பிணையில் விடுதலையான சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹரன் ஹசிமின் மைத்துனர் குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹாரான் ஹாசிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் ஆவார்.

சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

wpengine

கண்ணில் மண்ணை தூவிவிட்டு தேவையானதை அரசு செய்கின்றது.

wpengine

சமூக வலைத்தளம் ஊடான பதிவு பதற்ற நிலைக்கு காரணம்

wpengine