பிரதான செய்திகள்

கரம்பிடித்த கனவனையே அநியாயமாக கொலை செய்த மனைவி!

உறவினர் வீடொன்றில் நிகழ்ந்த புண்ணிய தானத்திற்கு செல்ல ,கணவன் அனுமதி வழங்காததால் தூக்கத்திலேயே கணவனை மனைவி கொன்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வலப்பனை-பாலுகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவரை கொன்ற மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவர் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவர் உறங்கிக் கொண்டிருந்த போது மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போர் பிரகடனம்.

wpengine

டக்ஸன் பியூஸ்லஸின் மரணம்! அமைச்சர் G.L.பீரிஸிற்கு அடைக்கலநாதன் கடிதம்

wpengine

அமெரிக்கா ,பிரித்தானியாவின் நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.

wpengine