பிரதான செய்திகள்

ஜூன் 1 முதல், இறகுமதிக்கு தடை விதிக்கப்படவுள்ள 14 பொருட்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் ஜூன் 1 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கான தடை அமுலுக்கு வரும்.

அதன்படி, பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் துணைக்கருவிகள், பிளாஸ்டிக் மேஜைப் பாத்திரங்கள், சமையலறை பாத்திரங்கள், பிளாஸ்டிக் சுகாதார கழிவறை பொருத்துதல்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், யோகட் கோப்பை தவிர, ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் கோப்பைகள், பிளாஸ்டிக் கரண்டி, முட்கரண்டி, கத்தி, பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, செயற்கை பூக்கள், இலைகள் மற்றும் பழங்கள் ஆகியவை தடை செய்யப்பட உள்ளன.

Related posts

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

மன்னார்,முசலி,நானாட்டான் வாழ்வாதாரத்தில் பண மோசடிகள்! பயனாளிகள் விசனம்

wpengine