பிரதான செய்திகள்

நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் போராட்டம் நிறைவு!

மருத்துவ விடுப்பு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி 4 நாட்களாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இன்று (07) முதல் தமது கடமைகளில் ஈடுபடவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எஞ்சிய மருத்துவ விடுப்புகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு திறைசேரியின் பொது வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் எழுத்து மூலமான இணக்கம் தெரிவித்ததையடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்ததாக அவர் கூறினார்.

Related posts

நானாட்டான் பிரதேச செயலக காணி போதனாசிரியரின் காணி கொள்ளையில் கிராம சேவையாளருக்கு தொடர்பு! வெளிவரும் உண்மைகள்

wpengine

நாடாளுமன்றத்தின் கூட்டம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபா

wpengine

தொலைபேசிகள் காணாமற் போனா இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு

wpengine