பிரதான செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை!

தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்வதற்கு விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைப் பரிசோதிப்பதற்கான சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சட்டத்தை கடைப்பிடிப்பதுடன், தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த காலப் பகுதியில் பொலிஸார் இரவு பகலாக நடமாடும் ரோந்துப் பணிகளில் முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைச் சாவடிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

பாடசாலை கல்வித்துறையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

Maash

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள முஸ்லிம்களின் கடைகளை அகற்றும் தமிழ் இனவாதிகள்

wpengine

6 மாதங்களில் 791 கிலோ ஐஸ் மற்றும் 366 கிலோ ஹெரோயின் போதைப்பொருள்கள் மீட்பு.

Maash