பிரதான செய்திகள்

சீனா ஜனாதிபதி – பிரான்ஸ் ஜனாதிபதி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை!

சீனாவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டு ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை இன்று (06) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கின்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே, நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்து உள்ளேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான தெரிவித்துள்ளார்.

மேலும் ,சீனாவுடன் எங்களுடைய வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

ஒருபுறம் அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராகவும், எச்சரிக்கை விடுவது போலவும் தங்களை காட்டி கொண்டாலும், அந்நாட்டுடனான உறவை தொடர்வதிலும் தயக்கமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது.

Related posts

சமூர்த்தி அபிமாணி சந்தை வவுனியாவில்

wpengine

வவுனியா தெற்கு வலயத்தில் அல்- இக்பால் மகா வித்தியாலயம் முதலிடம்

wpengine

ரணில்,மஹிந்த அரசில் பல கோடி ஊழல்! ஊழியர்களின் சம்பளத்தைக் கோரும் உரிமை கிடையாது

wpengine