Breaking
Sat. Nov 23rd, 2024

குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கான அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வைத்தே அவரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கும், தனக்கும் இடையில் 2006ம் ஆண்டில் தொடர்பு இருந்ததாக அபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் மறுத்திருந்தார்.

இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப்பின் சட்டத்தரணி, அபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸிற்கு 1,30,000 அமெரிக்க டொலரை வழங்கி, சமரசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வழங்கப்படும் பண கொடுப்பனவானது, ஹஷ் மணி என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல் சட்டத்திற்கு முரணானது அல்ல என கூறப்படுகின்றது.

ஆனால் சிக்கல் எங்கே ஆரம்பித்தது என்றால், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து, ட்ரம்ப்பின் சட்டத்தரணி மைக்கேல் கோச்சனின் செலவுகளுக்கான பணத்தை திருப்பி செலுத்துதல் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சட்டக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதாகக் கூறி தனது வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அப்போது தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் இந்த விவகாரங்கள் நடைபெற்றுள்ளன.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *