Breaking
Wed. Dec 4th, 2024

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 15 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து புதிய மாணவர்களைத் தாக்கி காயப்படுத்தியதற்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெஹிவளை, மொரட்டுவ, அம்பலாங்கொட மற்றும் வெலிமடை பிரதேசங்களைச் சேர்ந்த 23, 24 மற்றும் 25 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (29) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *