Breaking
Sun. Nov 24th, 2024

எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களை வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டர் சிட்டி நட்பு எண்ணக்கருவின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என தான் கூறும் போது, இது குறித்த சரியான புரிதல் இல்லாத இந்நாட்டிலுள்ள ஒரு சில அறிவீனர்கள் கேலி செய்வதாகவும், எவர் எவ்வாறான கேலி செய்தாலும், இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைக்கப்பட்டு நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் நகரங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுனாமிப் பேரலையால் நம் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகள் அழிவுக்குட்பட்ட போது, வெளிநாடுகளிலுள்ள பாடசாலைகளில் இருந்து பிள்ளைகள் பணம் சேகரித்து நமது நாட்டில் பாடசாலை கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்ப உதவினார்கள் என்றுதான் அவ்வாறு கேலி செய்பவர்களிடம் கூற வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிய எண்ணக்கருக்களை, புதிய போக்குகளை, புதிய திட்டங்களை வகுத்து அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த பிரபஞ்சம் எண்ணக்கரு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த எண்ணக்கரு குறித்து யார் எவ்வாறு பேசினாலும் அல்லது கேலி செய்தாலும், இந்த எண்ணக்கரு இப்போது மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 206 இலட்சம் பெறுமதியான நவீன வகுப்பறை உபகரணங்கள் எமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் முடிவிற்குள் 52 பாடசாலைகள் இதனால் வளம் பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் இந்நேரத்தில் சம்பிரதாய முறைகளால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், நிபுனத்துவ அறிவை மையமாகக் கொண்ட கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் எனவும், எந்த தரப்பினரின் விமர்சனங்களையும் பொருட்படுத்தாது இந்தநாட்டிலுள்ள 10,150 அரச பாடசாலைகளை வெளிநாட்டு பாடசாலைகளுடன் இணைத்து எமது நாட்டு பாடசாலைகளை எமது நாட்டு பாடசாலை கட்டமைப்பின் ஊடாக அபிவிருத்தி செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியூடாக நல்ல கல்வி விருத்திக்கு வழிவகுக்கிறதா என்பதை நாம் கண்டறிய வேண்டும் எனவும், சில பாடசாலைகளில் ஒரே மண்டபத்தில் பல வகுப்பறைகள் நடத்தப்படுவதாகவும், இந்நாட்டில் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நமது நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் ஒரு ஆங்கில ஆசிரியர் கூட இல்லாத நிலை காணப்படுவதாகவும், இது குறித்து எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி எப்படியாவது அந்த ஆசிரியர்களை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எழுத்தறிவில் உயர் மட்டத்தில் இருக்கிறோம் என்று கூறப்பட்டாலும், அந்த கனிப்பீட்டை நம்பமுடியாது எனவும், இந்நாட்டில் சம்பிரதாய முறையிலான கல்வி முறைமையில் மாற்றம் வர வேண்டும் எனவும், இதனூடாக உயர் எழுத்தறிவை எட்ட முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பந்தோட்டை வீரவில எம். ஆர்.தாஸிம் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பிரபஞ்சம் திட்டத்தின் 25 ஆவது கட்டத்தின் கீழ் டிஜிடல் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் 25 ஆவது கட்டமாக 924,000 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹ/வீரவில எம்.ஆர்.தாஸிம் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இவ்வாறு கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் இருபத்தி மூன்று கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 19,729,650 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *