Breaking
Tue. Dec 3rd, 2024

இலங்கை கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் USAID நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் உயிலங்குளம் கமநல சேவை நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இலவச உரம் வழங்கும் நிகழ்வு மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார் அவர்களின் தலைமையில் உயிலங்குளம் கமநல சேவை நிலையத்தில் இன்று(23/03/27) காலை 10 அளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு விவசாய திணைக்கள அதிகாரிகள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தின்(மண் உரம்) 36,000 மெட்ரிக் தொன் USAID நிறுவனத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்றது. அனைத்து மாவட்டங்களுக்கும் 11,537 மெட்ரிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திற்கு 1,244 மெட்ரிக் தொன் உரம் அனுப்பப்பட்டுள்ளது. நீர்பாசன நீர் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 22 கிலோ உரமும், மழையை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 10 கிலோ உரமும் வழங்கப்படும். குறித்த உரம் 17 ஆயிரத்து 868 விவசாயிகளுக்கு, 21 ஆயிரத்து 621 கெக்டெயர் விவசாய செய்கையை மேற்கொள்வதற்காக பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் TSP அடி உரம் 2 வருடங்களின் பின்னர் எமது நாட்டிற்கு கிடைக்கப் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *