உலகச் செய்திகள்

துனிசியா படகு விபத்தில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு!

மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஆபிரிக்காவில் இருந்து சென்ற படகில் இருந்த ஐந்து பேரை மட்டுமே தம்மால் மீட்க முடிந்தது என துனிசிய கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 2,000 க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு வந்தடைந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களில், அகதிகளை ஏற்றிச் சென்ற குறைந்தது ஐந்து படகுகள் மூழ்கியதில் 67 பேர் காணாமல் போயுள்ளதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் இத்தாலி நோக்கிச் சென்ற சுமார் 80 படகுகளை தடுத்து நிறுத்தியதாகவும், 3,000 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்ததாகவும் கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர்.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள வறுமை மற்றும் மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேறும் மக்களுக்கு ஸ்ஃபாக்ஸ் கடற்கரை ஒரு முக்கிய புறப்பாடு புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் – ஐவரும் பலி!

Editor

டொல்பின் மீது காதல் கொண்டு! ஆறு மாதம் உறவில் ஈடுபட்ட நபர்

wpengine

வட-கிழக்கு இணைப்பு ஓரு இனம் இன்னோர்! இனத்தை நசுக்கும் இணைப்பு (விடியோ)

wpengine