Breaking
Fri. Nov 22nd, 2024

எதிர்வரும் மாதங்களில் நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், மே – ஜூன் மாதமளவில் முழுமையான கள நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்தார்.

இதன் பின்னர் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு முதல் இதற்கான செயற்பாடுகளை கொரோனா மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *