பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கொந்தளிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது என்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதி செய்வதே நடைமுறையாகும் என இலங்கை அரச தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் சட்டக் கட்டுப்பாடுகளுக்குள் மக்கள் பேச்சு சுதந்திரம் பெற வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இயல்புநிலையையும் அமைதியையும் மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தேரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

வன்னிக்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெயர் விபரம்

wpengine

சமூகவலைதளத்தில் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

wpengine

அல்லாஹ்வின் நாட்டத்தில் சமூகக் கெடுபிடிகள் ஒழிய ஈகைத்திருநாளில் இறைஞ்சுவோம்..!

wpengine