உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தீபாவளிக்கு எடுத்த புது துணிகளுடன்! திண்டுக்கல்லில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மாயம்

தங்களை தேட வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவிகள் சென்றால் பரபரப்பு

தமிழக மாவட்டம் திண்டுக்கலில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் நேற்றைய தினம் டியூசனுக்கு செல்வதாக கூறி கிளம்பியுள்ளனர்.

ஆனால், அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. குறித்த மாணவிகள் இருவரும் தீபாவளிக்கு எடுத்த புது துணிகளுடன் சென்றுள்ளனர்.

மாயமான இரு மாணவிகளில் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

இதனால் அச்சமடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், குறித்த மாணவிகளை தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை தருணத்தில் பள்ளி மாணவிகள் இருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

20ஆம் திகதி அமர்வு அமைச்சர் பைஸர் முஸ்தபா

wpengine

மர்ஹூம் அஷ்ரப் மரணம்! திடுக்கிடும் சில உண்மைகள்

wpengine

அரசாங்கம் ஊடகங்களுக்கு அறிவிக்காமல் பாரிய பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையில்..!

Maash