கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுகமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 17 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைந்துள்ளது.
அத்துடன், இன்று (23.10.2022) காலை 05.30 மணிக்கு அதே கடல் பிராந்தியத்தில் காணப்பட்டுள்ளது.
இது தற்போது Port Blair (Capital city of the Andaman Islands) இருந்து வட மேற்காக 580 கிலோமீற்றர் தூரத்திலும் Sagar Island (West Bengal, India) இருந்து தெற்காக 700 கிலோ மீற்றர் தூரத்திலும் Barisal (South-central City, Bangladesh) இருந்து தெற்காக 830 கிலோ மீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது.
இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.