பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

100 வயதை அண்மையில் பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜையினை கௌரவித்த ஏ.ஸ்ரான்லி டிமெல்

சர்வதேச சிறுவர், முதியோர் தினமான நேற்று சனிக்கிழமை(1) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வசித்து வரும் நூறாவது (100) வயதை அண்மையில் பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜையான மனுவேல் சந்தான் என்பவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ‘மாறிவரும் உலகில் மீள் உய்கை மிக்க சிரேஷ்ட பிரஜைகள்’ எனும் தொனிப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடிய மனுவேல் சந்தான் என்ற மூத்த பிரஜையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் நேற்று சனிக்கிழமை(1) காலை நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பண பரிசு வழங்கி கௌரவித்தது,குறித்த சிரேஷ்ட பிரஜை இடம் ஆசி பெற்றார்.

இதன் போது மன்னார் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.செந்தில் குமார்,பங்குத்தந்தை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செம்மன்தீவு பகுதியில் அமைக்கப்பட உள்ள முதியோர் பகல் நேர நிலையத்திற்கான அடிக்கல்லை அரசாங்க அதிபர் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

Related posts

அரசாங்கம் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது! அதில் கருணா,உலகக்கிண்ணம் என பல

wpengine

அரசியல் கட்சி ஒன்றின் கொள்கைக்காக ஞானசார குரல் கொடுக்கின்றார்.

wpengine

தடை செய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைகின்றது , இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைகூறி, சீனாவிடம் உதவிகளைப் பெற அரசாங்கம் முயற்சி.

Maash