பிரதான செய்திகள்

வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்

நாட்டில் நிலவுகின்ற கடுமையான மழை காரணமாக நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் வெகரகல நீர் தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 4 வான் கதவுகளை இன்று இரவு 10 மணிக்கு திறக்கவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம்  தெரிவித்தது.


இதற்கமைய, வினாடிக்கு ஆயிரம் கன அடி கொள்திறன் நீர் , மாணிக்க கங்கைக்கு திறந்து
விடப்படவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அமரஜீவ லியனகே எமது
செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆகவே மாணிக்க கங்கைக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி வழங்கிய 22 வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

Maash

நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் இலங்கை வருகை

wpengine

நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்-ரவூப் ஹக்கீம்

wpengine