பிரதான செய்திகள்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு தீர்வுகளை காண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டாலோ, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் வருமானம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பந்தன் உடனடியாக பதவிவிலக வேண்டும்: கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு

wpengine

அஸ்-ஷூஹதா பாடசாலைக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் ஒலி பெருக்கி சாதனங்கள் கையளிப்பு

wpengine

இலங்கையில் உள்ள மிக மோசமான பயங்கரவாதி விக்னேஸ்வரன்

wpengine